இந்த ஆண்டும் திருவிழா நடைபெறாமல் போனதால் மக்களுக்கு பெரும் கவலையே ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி ஆலயம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கோலாகலமாக திருவிழா நடைபெற்று வருவது வழக்கம் செங்குன்றத்தில் உள்ள பக்தர்கள் பால்குடம் துகியும் வாயில் வில் ஏந்தியும் தீ மீதித்தூம் ஆரவாரமாக சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்து வந்தனர். கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணத்தினால் ஆண்டாண்டு நடந்து கொண்டிருந்த திருவிழா, நோய் தொற்று பரவும் அபாயதினால் கடந்த ஆண்டு நடைபெறாமல் போனது. இதனால் கடந்த ஆண்டு அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் கோவில் திருவிழா நடத்த கோவில் நிர்வாகிகளால் முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் மீண்டும் கொரோனா பரவும் நிலை ஏற்பட்டதால் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகக்கூடும் என்பதால். அவுறாட்சி மன்றம் தலைவர் திருமதி. ஜெயலட்சுமி நடராஜன் திருவிழாவை நடத்த தடை விதித்தார். இதனை எதிர்த்த கோவில் நிர்வாகிகள். இந்த பிரச்சனையே திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு. பொண்ணையணிடம் முன்வைத்தனர். அவரும் கொரோனா பரவும் அபாயத்தை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் தீமிதி திருவிழா நடபதிற்கு தடை விதித்தார்.
Comments
Post a Comment